சிலம்பப் போட்டியில் திண்டுக்கல் சிறுவன் சாதனை
14 Aug 2026, 9:40 pm

சிலம்பப் போட்டியில் திண்டுக்கல் சிறுவன் சாதனை

திண்டுக்கல், ஆக.14-திண்டுக்கல் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சிலம்பப் போட்டியில் சிறுவன் அ.மோ.துருவன் முதலிடம் பிடித்து சாதனை படைத்தான்.

திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் 42 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு ஜி.டி.என். கலைக்கல்லூ

ரியில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன.

10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சிலம்பப் போட்டியில் பங்கேற்ற அ.மோ.துருவன் கலந்துகொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றார்.

இந்த சிறுவன், டி.என்.யு.நேசனல் பப்ளிக் பள்ளியில் யூ.கே.ஜி. வகுப்பில் படிக்கும் துருவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுககல்மாவட்டக்குழு அலுவலகச் செயலாளர் அழகுராஜா மற்றும் மோகனா ஆகியோரின் மகன் ஆவார். மாவட்டஅளவில் நடைபெற்ற இந்த போட்டியில் சிலம்பத்தின் அரிச்சுவடி பாடங்களை முறையாகசெய்து காட்டியதற்காகவே நடுவர் குழு துருவனுக்கு முதல்பரிசு தந்து ஊக்குவித்துள்ளது.