தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மானிய விலையில் தினமும் 5 லிட்டர் எரிபொருள் வழங்கிடுக! திண்டுக்கல்லில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

27 Oct 2026, 10:29 pm
மானிய விலையில் தினமும் 5 லிட்டர் எரிபொருள் வழங்கிடுக! திண்டுக்கல்லில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>மானிய விலையில் தினமும் 5 லிட்டர் எரிபொருள் வழங்கிடுக! திண்டுக்கல்லில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திண்டுக்கல், அக்.27-ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் தினமும் 5 லிட் டர் பெட்ரோல், டீசல் அல்லது எரிவாயு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு திண் டுக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.</p><p>மாவட்டத் தலைவர் ஆர்.பால் ராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் வி.குமார் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பாலசந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் சி.பி.ஜெயசீலன், மாவட்ட நிர் வாகிகள் அழகர்சாமி, பிச்சைமுத்து, தனசாமி ஆகியோர் பேசினர்.ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.பாண்டியன் நிறைவுரையாற்றினார். எம்.பழனிச்சாமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.