தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

12-ஆம் வகுப்பு தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் 95.92% தேர்ச்சி 86 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

9 May 2026, 9:18 pm
12-ஆம் வகுப்பு தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் 95.92% தேர்ச்சி 86 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
<p><strong>12-ஆம் வகுப்பு தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் 95.92% தேர்ச்சி 86 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை</strong></p><p>திண்டுக்கல், மே 8- திண்டுக்கல் மாவட் டத்தில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.92 சதவீத மாணவ, மாண வியர்கள் தேர்ச்சி பெற்றுள்ள னர். மேலும், மாவட்டத்தில் உள்ள 86 பள்ளிகள் 100 சத வீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. மார்ச் 2026-ல் நடை பெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், திண்டுக் கல் மாவட்டத்தைச் சேர்ந்த 215 பள்ளிகளில் இருந்து 9,728 மாணவர்கள் மற்றும் 11,322 மாணவியர் என மொத்தம் 21,050 பேர் தேர்வு எழுதினர். இதில், 9,121 மாணவர் கள், 11,070 மாணவியர் என மொத்தம் 20,191 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் – 93.76%, மாணவியர் – 97.77% என ஒட்டுமொத்த தேர்ச்சி – 95.92% தேர்ச்சி சதவீதம் அடைந்துள்ளனர். இந்தாண்டு தேர்ச்சி சத வீதம் கடந்த ஆண்டைவிட 1.02 சதவீதம் அதிகரித்துள் ளது. மேலும், மாவட்ட அளவி லான தரவரிசையில் திண்டுக் கல் மாவட்டம் கடந்த ஆண்டு 20-ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 17-ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அரசுப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளில், 3,776 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3,376 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,708 மாணவியர் தேர்வு எழுதி யதில் 4,529 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்கள் தேர்ச்சி சத வீதம் – 89.41%, மாணவியர் தேர்ச்சி சதவீதம் – 96.20%, அரசுப் பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி – 93.18%. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டைவிட 1.90 சதவீதம் உயர்ந்துள்ளது. மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளின் தரவரிசை யும் 25-ஆவது இடத்திலி ருந்து தற்போது 20-ஆவது இடத்திற்கு முன்னேற்றம் பெற்றுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.