தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வு திண்டுக்கல் மாவட்ட சாதனை மாணவிகளுக்கு வாலிபர், மாணவர் சங்க தலைவர்கள் பாராட்டு

23 May 2026, 10:31 pm
பத்தாம் வகுப்பு தேர்வு திண்டுக்கல் மாவட்ட சாதனை மாணவிகளுக்கு வாலிபர், மாணவர் சங்க தலைவர்கள் பாராட்டு
<p><strong>பத்தாம் வகுப்பு தேர்வு திண்டுக்கல் மாவட்ட சாதனை மாணவிகளுக்கு வாலிபர், மாணவர் சங்க தலைவர்கள் பாராட்டு</strong></p><p>திண்டுக்கல், மே 23- திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட முதலி டம் பிடித்து சாதனை படைத்த இடைக் கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அனுமித்ரா மற்றும் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயஶ்ரீ ஆகியோரை இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலை வர் ஜெ.தீபக்ராஜ், மாவட்டச் செயலாளர் நிருபன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.ரஞ்சித் சேகுவேரா, மாவட் டச் செயலாளர் ஏ.கே.முகேஷ் மற்றும் நிர் வாகிகள் சுரேஷ், ரமேஷ், விஜயகுமார், செல்வா, சிவா உள்ளிட்டோரும் பங்கேற்று மாணவிகளின் சாதனையை பாராட்டினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.