திண்டுக்கல் - சமயநல்லூர் இடையிலான சாலை 6 வழிச்சாலையாக மாற்றம்! சு. வெங்கடேசன் எம்.பி.யின் கோரிக்கை ஏற்பு
28 Jan 2026, 2:33 pm
<p><strong>திண்டுக்கல் - சமயநல்லூர் இடையிலான சாலை 6 வழிச்சாலையாக மாற்றம்! சு. வெங்கடேசன் எம்.பி.யின் கோரிக்கை ஏற்பு</strong></p>
<p>மதுரை, ஜன. 28 - திண்டுக்கல் முதல் சமயநல்லூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை (NH-44) பகுதியை 4 வழிகளிலிருந்து 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ஒன்றிய அரசு முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் - சமயநல்லூர் இடையிலான சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி, கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சா லைத் துறை அமைச்ச ருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது பதிலளித்துள்ளார். அதில், “திண்டுக்கல் - சமய நல்லூர் இடையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றுவது குறித்து விரிவாக ஆய்வு செய்யப் பட்டது. தற்போது இத்திட்டத் திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மற்றும் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான பணிகளைத் தொடங்குமாறு தேசிய நெடுஞ் சாலை ஆணையத்திற்கு (NHAI) அறிவுறுத்தப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.” எனக் குறிப் பிட்டுள்ளார். இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ள சு. வெங்கடேசன் எம்.பி., “இந்தச் சாலை விரி வாக்கம் செய்யப்படுவதன் மூலம், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும். விபத்துக் கள் தவிர்க்கப்பட்டு பயண நேரம் மிச்சமாகும். வணிக ரீதியிலான போக்குவரத்து மேம்படும். எனவே “எனது முக்கியமான கோரிக்கை யை ஏற்ற அமைச்சருக்கு நன்றி. விரிவான திட்ட அறிக்கையை தொடர்ந்து திட்டத்திற்கான நிதியை தாமதமின்றி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள் ளார்.</p>
