முந்தய பக்கம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை நீர்த்துப்போகச்

31 Jan 2026, 5:27 pm
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை நீர்த்துப்போகச்
<p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள &lsquo;வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வாழ்வாதாரத் திட்டத்தால்&rsquo; ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரணமல்லூர் பகுதியில் தீவிரப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. பெரணமல்லூர் வட்டாரச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் ஏந்தல் ஊராட்சியில் இந்தப் பரப்புரை நடைபெற்றது. அதேபோல், அரியபாடி, செப்டான்குளம், தாடிநொளம்பை, வல்லம் ஆகிய ஊராட்சிகளில் இடைக்குழு உறுப்பினர் பி.கே. முருகன் தலைமையில் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பெருமாள் ஆகியோர் 100 நாள் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, மத்திய அரசின் திட்டத்தால் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விளக்கிப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram