கரைவழி நாட்டுக்கல்லாபுரத்தில் சிதிலமடைந்த புடைப்புச்சிற்பங்கள்
23 Feb 2026, 5:35 pm
<p><strong>கரைவழி நாட்டுக்கல்லாபுரத்தில் சிதிலமடைந்த புடைப்புச்சிற்பங்கள்</strong></p>
<p>உடுமலை, பிப்.23- உடுமலை வட்டம் கல்லா புரம், கரை வழிநாட்டில் முதல் சிற்றூர் இங்கு மூன்று புறமும் மலைப்பகுதியும் ஒரு புறம் சமவெளிப்பகுதியும் இதன் தட்பவெப்ப நிலையை மாற்றி அமைக்கிறது. காலை யில் மலைப்பகுதியில் சூரி யன் உதிப்பதும், மாலையில் அதே போன்று மலைப்பகுதி யில் சூரியன் மறைவதும் கல் லாபுரத்தின் சிறப்பான அம் சங்களாகும். கொங்கு நாட்டில் கரைவழி நாடு என்று குறிப் பிடப்படும் பகுதியின் முதல் பகுதி இந்த ஊர்தான். இந்த ஊரினை கரைவழி நாட்டுக் கல்லாபுரம் என்றும், விக்கிரம சோழ நல்லூர் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகி றது. அந்த வகையில் கல்லாபுரத்தை அடுத்துள்ள வனப்ப குதியில் கோபால்சாமி கோயில் என வட்டார வழக்கில் வழங் கப்படும் குத்துக்கல் நடுகல் உள்ள பகுதியில் சிதிலம டைந்த கற்தூண்கள், புடைப்புச்சிற்பங்கள் ஆங்காங்கே சிதி லமடைந்து கிடக்கின்றன. இதனை ஆய்வு செய்த உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர், இவ்விடத்தில் பெரிய மண்டபம் இருந்தமைக் கான சான்றுகளாக இந்தக் கற்தூண்கள் இருப்பதாகவும், கற் தூண்களில் காணப்படும் சிற்பங்களில் வைணவ வழி பாட்டைக் குறிப்பிடும் கிருஷ்ணர் புடைப்புச்சிலை இருக்கும் மூன்று கற்தூண்களை ஆவணப்படுத்தினர். கற்தூண் ஒன்றில் அரசன் அல்லது தலைவன் கைகூப்பி வழிபட்டு நிற்பது போன்றும், இன்னொன்றில் ஒரு தலைவன் அல்லது வீரன், கையில் பெரிய உடைவாளோடு நிற்பது போன்றும் புடைப்புச் சிற்பங்கள் இருக்கின்றன. இந்த கற்கள் வேறு பகுதியில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தூண்கற்கள் புடைப்புச் சிற்பம் செய்ய செதுக்கப்பட்ட தூண்களும், செதுக் காமல் பகுதி வேலை முடிந்த அளவில் இரண்டு கற்தூண் களும், எண்கோண வடிவத்தில் செதுக்கப்பட்ட இரண்டு தூண் களும் இருக்கின்றன. இந்தக் கற்தூண்கள் சுமார் 300 அல்லது 350 ஆண்டுகளுக்கு உட்பட்டவை. மேலும் இங்கிருந்து மிக அருகமையில் துருவத்துக் கரடு எனும் மலைப்பகுதியில் திப்பு சுல்தான் வந்து தங்கிச்சென்றதற்கான சான்றுகளும் இருப்ப தாக கரை வழி நாடும் நாகரிகமும் எனும் நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது, மேலும் உடுமலைப்பேட்டைக்கு முந்தைய வரு வாய் கிராமமாக சக்கரகிரிக்கோட்டை எனும் பகுதியாகவும் இவ்விடம் செயல்பட்டுள்ளது என்று தொல்லியல் ஆய்வா ளர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார்.</p>
