தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

9 Nov 2025, 4:12 pm
சென்னை விரைவு செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கான  டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம் தாம்பரத்தில் நாளை நடைபெறுகிறது

சென்னை,நவ.9- பாதுகாப்புப் படைகள், பாதுகாப்பு சிவில் நிறுவனங்கள் மற்றும் பிற மத்திய அரசு அலுவலகங்களின் ஓய்வூதிய தாரர்களுக்கு அவர்களின் டிஜிட்டல் ஆயுள் சான்றி தழ்களைப் (Digital Life Certificates - DLC) புதுப்பிக்கும் மாபெரும் முகாம் செவ்வாயன்று (நவ.11) தாம்பரம் விமானப்படைத் தளத்தில் (Air Force Station, Tambaram) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையும், பாதுகாப்பு கணக்குத் துறை யும் (Defence Accounts Department, Chennai) இணைந்து, நாடு முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 4.0 இன் ஒரு பகுதியாக இந்த முகாமை நடத்து கின்றன. இந்த முகாமில், பல்வேறு வங்கிகள் மற்றும் பாது காப்புப் படைகளின் ஆவண அலுவலகங்கள் தங்கள் கவுண்டர்களை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள்சான்றி தழைப் புதுப்பிக்கவும், ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்கவும் உதவி செய்யப்படும். மேலும், ஆயுள் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிப்பது குறித்தும் அவர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்படும்.

ஜி ஸ்கொயர் வீட்டுமனை விரிவாக்கம்:  9 நகரங்களில் 15 புதிய திட்டங்கள்

சென்னை,நவ,9- முன்னணி வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர், தமிழ்நாடு முழுவதும் 9 முக்கிய நகரங் களில் (சென்னை, கோவை, சேலம், ஓசூர், தூத்துக்குடி உள்ளிட்டவை) 15 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த ப்ரீமியம் திட்டங்கள் 600 முதல் 2,400 சதுர அடி  வரையிலான வீட்டுமனைகளைக் கொண்ட, உடனடியாக வீடு  கட்டத் தயாராக உள்ள, பாதுகாப்பு வசதிகள் நிறைந்த (ready-to-build gated communities) குடியிருப்பு சமூகங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அகலச் சாலைகள், 24x7 சிசிடிவி பாதுகாப்பு போன்ற வசதிகள் உள்ளன. இதுகுறித்து ஜி ஸ்கொயரின் நிறுவனர் பாலா ராம ஜெயம், கூறுகையில் வெளிப்படைத்தன்மை, நிலைத் தன்மை, மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவையே தங்களின் இலக்கு என்று கூறினார். மேலும், தங்கள் 13வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், ‘ஜீரோ ஈபி புரட்சி’ (தகுதி வாய்ந்த மனைகளுக்கு 5KW சூரிய மின்சக்தி பேனல்கள் இலவசம்) என்றும் அந் நிறுவனம் அறிவித்துள் ள்ளது.

மதுபான கடை பின்புறம் சுவரை  உடைத்து மதுபாட்டில்கள்

கொள்ளை பேரணாம்பட்டு,நவ,9- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அரசு மது பான கடையில் பின்புறம் சுவரை உடைத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 50 மது பாட்டில்கள் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது  இதில் மேற்பார்வையாளராக வேல்முருகன் மற்றும் விற்பனை யாளர் பால்ராஜ் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். சனிக்கிழமை இரவு வழக்கம் போல் மதுபான கடை யில் விற்பனை முடித்துவிட்டு கடையை மூடி சென்றுள் ளனர்.  இன்று மதியம்  கடை திறப்பதற்காக வந்து பார்த்தபோது மதுபான கடையின் பின்புறம் சுவற்றை உடைத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 50 மது பாட்டில்களை  மர்ம நபர்கள்  கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.கொள்ளை யடித்து சென்ற போது மது பாட்டில்கள் கீழே சிதறி கிடந்துள்ளது.  மதுபான கடை ஊழியர்கள் பேரணாம்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.  மேலும் இது தொடர்பாக அருகில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு  செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கடற்படை அரை மாரத்தான்” பதிவு துவக்கம்

சென்னை, நவ. 9 இந்திய கடற்படை தனது முதல் சென்னை அரை மாரத்தான் ஓட்டத்தை வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடத்த உள்ளது. இதில் பொது மக்களும் பங்கேற்பதற்காக அதன் இணைய வழி பதிவு தற்போது தொடங்கியுள்ளது. மும்பை, விசாகப்பட்டினம் போன்ற நகரங்க ளில் இதேபோன்ற மாரத்தான்களின் வெற்றிக்குப் பிறகு, இது முதல் முறையாக சென்னையில் நடத்தப்பட உள்ளது. கடற்படை சென்னை மாரத்தான் 2025, மூன்று பந்தயப் பிரிவுகளைக் கொண்டுள் ளது. அவை, “ஐஎன்எஸ் அடையாறு” என்ற  பெயரிலான 21.1 கி.மீ.  அரை மாரத்தான் ஓட்டம், “ஐஎன்எஸ் பருந்து” என்ற பெயரி லான 10 கி.மீ. ஓட்டம் மற்றும் “ஐஎன்எஸ் பல்லவா” என்ற பெயரிலான 5 கி.மீ. ஓட்டம் ஆகியவையாகும். இவை அனைத்தும் சென்னை நேப்பியர் பாலம் அருகே தொடங்கி, ஐஎன்எஸ் அடையாறு கடற்கரை யில் முடிவடைகின்றன. இதில் மொத்தம் ரூ. 10,00,000/- மதிப்பில் பரிசுத் தொகைகள்  வழங்கப்படுகின்றன. இந்திய கடற்படை சென்னை அரை  மாரத்தானில் சுமார் எட்டாயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டப்பந்தயத்தை வெற்றிகரமாக நடத்து வதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப் ப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க, https://chennainavyhalfmarathon.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள் ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து அவதி

தாம்பரம்,நவ.9- தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், வடமாநிலங் களுக்கும் தலா 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால், இங்கு வந்து செல்லும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 2.30 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், இந்த நிலையம் 2024- 25ம் ஆண்டில் மட்டும் ரூ.276 கோடி வரு வாய் ஈட்டியுள்ளது. இருப்பினும், இந்த  நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, பாண்டியன் உள்ளிட்ட விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் 7,8-வது நடை  மேடைகள் வழியாக இயக்கப்படு கின்றன. இந்த நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கி வசதி இல்லை. இதுதவிர, 5, 6-வது நடைமேடை களிலும் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதிகள் இல்லை. இதனால், விரைவு ரயில்களில் ஏறுவதற்காக இங்கு  வரும் பயணிகள் கடும் அவதிப்படு கின்றனர். குறிப்பாக, வயதானவர்கள், மாற்றுத் திறனாளி பயணிகள் இன்னல் களுக்கு ஆளாகி வருகின்றனர். இதுதவிர, நடைமேடைகளில் குடிநீர், கழிப்பறை என எந்த அடிப்படை வசதியும் இல்லை. 6,7,8-வது நடைமேடைக்கு செல்ல பேட்டரி கார் வசதி உள்ளது. ஆனால், இதற்கு கட்டணம் வசூலிக் கப்படுவதால், ஏழை மக்கள், மாற்றுத்தி றனாளி பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.

கழிவு பொருட்களை எரித்த  வேலூர் மாநகராட்சி ஊழியர்கள்

வேலூர், நவ 09 - வேலூர் பழைய பைபாஸ் சாலையில் பஸ், கார், லாரி, பைக் உள்ளிட்ட வாகனங் களின் மெக்கானிக் கடைகள் ஏராளமாக உள்ளன. இங்கு வாகனங்களை பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் தேவையற்ற பொருட்களை சாலையோரம் கொட்டி விடு கின்றனர். ஞாயிறன்று மாநகராட்சி தூய்மை பணி யாளர்கள் பழையபைபாஸ் சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். சாலையோரம் கொட்டப்பட்டு இருந்த கழிவு பொருட்களில் இருந்து கிடைக்கும் இரும்பை எடுப்பதற்காக தீ வைத்து எரித்தனர். தீ வேகமாக பற்றி எரிய ஆரம்பித்து, விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வந்தது.  அருகில் இருந்தவர்கள் உடனடி யாக இது குறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்குதகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், மாநகராட்சி தூய்மை பணி யாளர்கள் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி எரித்து விடுகின்றனர். இதனால் காற்று மாசு ஏற்படுகிறது. பழைய கழிவு பொருட்களை கொளுத்தி அதில் இருந்து கிடைக்கும் இரும்பு பொருட்களை எடுத்துச் சென்று பழைய பொருட்கள் வாங்கும் கடையில் விற்று விடுகின்றனர். எனவே கழிவுபொருட்களை முறையாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.