முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

23 Sept 2026, 10:25 pm
மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
<p><strong>மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்</strong></p><p>திருவில்லிபுத்தூர், செப்.23-வத்திராயிருப்பு தாலுகா மூவரைவென்றான் கிளை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார் பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட் டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து 125 நாட் கள் வேலை வழங்க வேண் டும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுவான பணிகளை ஒதுக்க வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்நடைபெற்றது.போராட்டத்துக்கு கிளைத் தலைவர் எம்.வனத் தாய் தலைமை வகித்தார். கிளைத் துணைத் தலைவர் எஸ்.சுப்பிரமணி முன்னிலை வகித்தார். தொடங்கி வைத்துதாலுகா தலைவர் சி.முகேஷ் பேசினார். தாலுகா செயலாளர் பி.சக்கரியா, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.பெனரி, சிஐடியு மாவட் டக்குழு உறுப்பினர் சி.ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து மாவட்டத் தலைவர் கே.நாகராஜ் பேசினார்.</p><p>இதில் தாலுகாக் குழு உறுப்பினர்கள் ஏ.போத்திராஜ், எம்.பழனி, ஜெபராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுவான பணிகள் ஒதுக்கப்பட்டு தொடர்ந்து வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம்தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram