வெற்றி பயண திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் அனுமதித்திடுக! பழனி, ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
3 Oct 2026, 11:32 pm

வெற்றி பயண திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் அனுமதித்திடுக! பழனி, ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பழனி, அக்.3-தமிழக அரசு சார்பில் தொடங்கப் பட்டுள்ள வெற்றி பயணத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயணவசதி வழங்கப்படவில்லை எனக் கூறி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அக்.2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெற்றி பயண திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பயண வசதி நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு இதுவரை இலவச பயண வசதி வழங்கப்படவில்லை என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், பேருந்து நடத்துநர்களிடம் உள்ள மின்னணு டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் பெண்கள் மற்றும்திருநங்கைகளுக்கான வசதிகள் இடம்பெற்றுள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகை அல்லதுஇலவச பயண வசதி தொடர்பான பதிவு இடம்பெறவில்லை என்றும் அவர்கள் கூறினர்.இதனைக் கண்டித்து பழனி நகர தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி நகரசெயலாளர் தங்கவேல், பொருளாளர் அய்யனார், பழனி ஒன்றிய தலைவர் மணிகண்டன், செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் மூகாம்பிகை ஈஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலைவகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பகத்சிங் கண்டன உரைஎன வலியுறுத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம்ஒட்டன்சத்திரத்திம் ரயில் நிலையம் முன்பாக சனிக்கிழமை சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் சண்முகராஜ், துணைச் செயலாளர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.