தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

17 Jul 2026, 11:34 pm
ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூலை 17- புதிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்த முன்மொழிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்தி றனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை களுக்கான சங்கத்தினர் பள்ளிபாளை யம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஏழை மாற்றுத்திறனாளிகள் குடும் பங்களுக்கு, ஒன்றிய, மாநில அரசு கள் கூடுதல் ஊட்டச்சத்து தேவைக ளுக்கு நிதி ஒதுக்கிட வேண்டும். சீரான சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய உணவு தானியங்களுடன் கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக் கான ஊட்டச்சத்து ஆதரவு உரிமை வழங்கிட வேண்டும். கடுமையாக ஊன முற்றவர்களுக்கும் நியாய விலை கடை களுக்கு தனியாக செல்ல முடியாத வர்களுக்கும், ரேஷன் பொருட்கள் வீட்டு வாசலிலே வழங்கப்படுவதை நாடு முழுவதும் உறுதி செய்ய வேண்டும். புதிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்த முன்மொழிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக் கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் அருண்குமார், சுப் பிரமணி, சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கை களை விளக்கி மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.ரங்கசாமி, ஆகியோர் பேசி னர். நிறைவாக சங்க நிர்வாகி அர் ஜுனன் நன்றி கூறினார். இதில், ஏராள மான மாற்றத்திறனாளிகள் பங்கேற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.