கருப்பு பேட்ஜ் அணிந்து சட்ட நகலெரிப்பு போராட்டம் மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்பு; கைது
1 hour before

கருப்பு பேட்ஜ் அணிந்து சட்ட நகலெரிப்பு போராட்டம் மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்பு; கைது

விருதுநகர், ஜூலை 1- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றம் செய்யக்கூடாது. கருவிழி பதிவு, கைரேகை பதிவு என்கிற பெயரால் மாற்றுத் திறனா ளிகளுக்கான வேலை வாய்ப்பை பறிக்கக் கூடாது. அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பாகு பாடின்றி நூறுநாள் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார் பில் புதனன்று தமிழகம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்ட நக லெரிப்பு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

அதனொரு பகுதியாக, விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற இப்போராட் டத்திற்கு மாவட்டப் பொருளாளர் கே.ஆரோக்கியராஜ் தலைமை யேற்றார். மாவட்ட துணைத் தலை வர் ரேணுகாதேவி துவக்கி வைத் தார். மாவட்டக்குழு உறுப்பினர் கள் மாரீஸ்வரி, ராதிகா, இந்துமதி, சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 38 பெண்கள் உட்பட 70 பேரை போலீசார் கைது செய்னர். சாத்தூர் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட நிர் வாகி ஸ்ரீதேவி துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சித்ரா, மீனா உட்பட 46 பேரை போலீ சார் கைது செய்தனர். வத்திராயிருப்பில் முத்தா லம்மன் திடல் அருகில் தாலுகா தலைவர் முகேஷ் தலைமையில் நடைபெற்றது. தாலுகா செயலா ளர் சக்கரியா முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் நாகராஜ் விளக் கிப் பேசினார். மாவட்ட இணைச் செயலாளர் சரவணன், திருவில்லி புத்தூர் துணைத் தலைவர் மாரி யப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜாகிர் உசேன், வத்திராயிருப்பு நிர்வாகிகள் சரண்யா, வனத்தாய், காளீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூரில் மாவட்டத் தலைவர் எம்.ராஜேஷ் தலைமை நடை பெற்றது. இதில் சிபிஎம் தாலுகாச் செயலாளர் கே.கணேசன், தாலுகா தலைவர் எஸ்.முனியசாமி, தாலுகா செயலாளர் பி.ஆரோக்கிய பிரபா கர், தாலுகா பொருளாளர் கே. மயில்சாமி, தாலுகா துணைத் தலை வர் முத்துக்கண்ணன், தாலுகா நிர் வாகிகள் தீக்கதிர் முத்துமணி, டி. மதன்குமார், என்.கர்ணன், என்.சண் முகவள்ளி, ஈஸ்வரி, ஆர்.ஜீவா, ஆர்.சுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆண்கள் 72 பெண் கள் 51 என மொத்த எண்ணிக்கை 124 கைது செய்யப்பட்டனர். கமுதியில் மாவட்ட துணைத் தலைவர் வி.முருகன், மாவட்ட துணைத் தலைவர் இ.முத்துராம லிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தாலுகா தலைவர் கு.சந்திரன், தாலுகா செய லாளர் சோ.முருகேசன், தாலுகா பொருளாளர் ந.ஸ்டாலின், தாலுகா துணைத் தலைவர்கள் பொன்.நாகையா, க.அர்ஜுனன், துணைச் செயலாளர் கு.கருப்பையா, வ. சரஸ்வதி, மருத்துவர் ரவி என்ற சின்னச்சாமி, சண்முகசுந்தரம், ப.மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆண்கள் 44 பெண் கள் 17 என மொத்த எண்ணிக்கை 61 கைது செய்யப்பட்டனர். சிக்கலில் மாவட்ட துணைச் செயலாளர் ஜே.நூர்முகமது தலை மையிலும், தாலுகா பொருளாளர் டி.கவிதா முன்னிலையிலும் நடை பெற்றது. மாவட்டக் குழு உறுப்பி னர் ஏ.முகமது சுல்தான், ஏர்வாடி கடல் தொழிலாளர் சங்கத்தின் நிர் வாகி எம்.பி.முருகேசன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. பச்சைமால், விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் எஸ்.ராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். ஆண்கள் 20 பெண்கள் 7 என மொத்த எண்ணிக்கை 27 கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மாவட்டச் செயலாளர் எம். ராஜ்குமார் தலைமையில் நடை பெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.குருவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் என்.கலையரசன், இ.கண் ணகி, மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட பொருளாளர் என்.அரிகர சுதன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் கே.நிலவேலி, இராம நாதபுரம் தாலுகா செயலாளர் ஏ. ஹாஜா முகமது, இராமநாதபுரம் பொருளாளர் ஆர்.சத்யா, மாவட் டக் குழு உறுப்பினர் நாகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் உறுதி

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டி ருக்கும் போது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச் சர் மரு.வி.கே.ராஜீவ் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி களிடம் கலந்துரையாடினார். அப் போது தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட மாதம் உதவித் தொகை ரூ.3,000 வழங்குவதற்கு முதலமைச்சரிடம் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். ஆண்கள் 18 பெண்கள் 2 என மொத்த எண்ணிக்கை 20 கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.