முந்தய பக்கம்

புதிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை திரும்ப பெற்றிடுக! மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

20 Jul 2026, 10:09 pm
புதிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை திரும்ப பெற்றிடுக! மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>புதிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை திரும்ப பெற்றிடுக! மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>இராமநாதபுரம், ஜூலை 20- புதிய உணவு பாதுகாப் புச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திங்க ளன்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அதனொரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டத் தலைவர் எம்.ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் எம்.ராஜ் குமார் துவக்க உரையாற்றி னார். மாவட்டத் துணைத் தலைவர் வி.முருகன், மாவட்ட பொருளாளர் என். அரிகரசுதன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி. நூர்முகமது, நிழற்வேணி, முதுகுளத்தூர் தாலுகா பொருளாளர் கு.மயில்சாமி, கமுதி தாலுகா பொருளாளர் ந.ஸ்டாலின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில துணைச் செயலா ளர் கே.நாகராஜ் நிறைவுரை யாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram