உணவுப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை கைவிட வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
15 Jul 2026, 11:31 pm
<p><strong>உணவுப் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை கைவிட வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>செங்கல்பட்டு, ஜூலை 15- தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத் தில் கொண்டுவரப்படவுள்ள திருத்த முன்மொழிவுகளை ஒன்றிய அரசு உடன டியாகக் கைவிட வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தாட்சாணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு நபருக்கு 7 கிலோ அரிசி மற்றும் தானி யங்கள் மட்டுமே வழங்கப்படும் என்ற புதிய திருத்த முன்மொழிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்தயோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவுப்படி தகுதியுள்ள மாற்றுத்திற னாளிகளின் குடும்பங்கள் அனைத்திற்கும் அந்தத் திட்டத்தின் கீழ் ரேசன் அட்டைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. மேலும், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ் வாதாரத்தையும் உணவு உரிமையை யும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.வெள்ளி கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் கே.லிங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.</p>
