தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

27 May 2026, 11:43 pm
வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
<p><strong>வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்</strong></p><p>ஈரோடு, மே 27- மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை கேட்டு மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகம் முன் போராட்டம் அறி விக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. கிராமப்புற விவசாயத் தொழிலா ளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை அளிக்கப்பட்டு வந்தது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை மட்டுமே அளிக்கப் பட்டு முழு ஊதியமும் அளிக்கப்பட் டது. பாஜக அரசு, இதற்கான நிதி ஒதுக்கீட்டை படிப்படியாகக் குறைத்து வந்தது. இறுதியாக மகாத்மா காந்தி பெயரை நீக்கி விட்டு விபிஜி ராம்ஜி என பெயர் சூட்டியது. அத்து டன் திட்டத்திற்கான நிதியில் 40 விழுக்காடு மாநில அரசுகள் வழங்க வேண்டும் என மாற்றியமைத்துள் ளது. இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வேலை கேட்டு மனு கொடுத்து காத்தி ருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட் டது. அதன்படி புதனன்று ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திரண்ட நிலையில் ஆணையாளர் வர வில்லை. மேலும் அவரது வருகை குறித்து முறையான பதிலில்லாத நிலையில் போராட்டக்குழுவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் குண்டு கட்டாக கைது செய்து வாக னத்தில் ஏற்றினர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் வந்த நிலையில் கைது செய்யப்பட்டவர் கள் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக, சங்கத்தின் தாலுகா தலைவர் கே.சொங்கப்பன் தலை மையில் மேட்டுப்பாளையம், ஈஞ்சம் பள்ளி, ஆனந்தம்பாளையம் மற்றும் பழமங்கலம் ஊராட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என மனு கொடுத் தனர். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து, தாலுகா செயலாளர் எம்.லோகநாதன், கௌரவத் தலைவர் எஸ்.தனபாக்கி யம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். உழைக்கும் மக்கள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் சி.முருகேசன், கொடுமுடி தாலுக்கா செயலாளர் எம். சசி, மொடக்குறிச்சி விதொச தாலுகா செயலாளர் டி.தங்கவேல் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். நிறைவாக தாலுகா உதவி தலைவர் எம்.சுந்தரம் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.