குடிமனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் மனு
1 hour before
<p><strong>குடிமனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் மனு</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 23- இராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் பசலி 1435-ஆம் ஆண்டிற்கான வரு வாய்த் தீர்வாயம் (ஜமா பந்தி) கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி ஆணை யர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை) வி.கங்கா தேவி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தமிழ் நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளி களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. தாலுகா துணைத் தலை வர் எம்.ராமச்சந்திரன் தலை மையில் மனு வழங்கப் பட்டது. இதில் மாவட்டத் தலைவர் எம்.ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர் வி.முருகன், தாலுகா செய லாளர் பி.ஆரோக்கிய பிரபா கர், தாலுகா துணைத் தலை வர் முத்துக்கண்ணன் உள் ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளி களுக்கு குடியிருப்பதற்கான நில உரிமையை உறுதி செய்யும் வகையில் குடி மனை பட்டாக்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட் டுள்ளது.</p>
