சிறப்பு மருத்துவ முகாம் என அறிவித்துவிட்டு ஒத்திவைப்பதா? மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடும் கண்டனம்
29 Oct 2026, 12:45 am

சிறப்பு மருத்துவ முகாம் என அறிவித்துவிட்டு ஒத்திவைப்பதா? மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடும் கண்டனம்

உடுமலை, அக்.28-மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மடத்துக்குளத்தில் நடைபெறும் என அறிவித்து, அன்றைய தேதியில் முகாம்நடைபெறாமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்த செயலுக்கு,அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் அழகர்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர்மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் புதனன்று மடத்துக்குளத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாள் மற்றும் இடம்குறித்த அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. இதனை நம்பி முகாமுக்கு வருவதற்கு தயாராக இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, முகாம் நடைபெறாது என்பது குறித்துமுன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றத்திற்கும்அலைக்கழிப்பிற்கும் உள்ளாகினர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, உடுமலைப்பேட்டையிலேயே முகாம் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளத்தில் முகாம் நடைபெறும் எனஅறிவித்துவிட்டு, அங்கு முகாமைநடத்தாமல் வேறு இடத்தில் முடித்துவிட்டதாக கூறுவது ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே உடுமலைப்பேட்டையில் முகாம் நடத்தப்பட்டநிலையில், மடத்துக்குளத்திற்கென அறிவிக்கப்பட்ட முகாம் நடைபெறாதது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடல் இயக்க சிரமங்கள்,போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளை இவ்வாறு அலைக்கழிப்பது கண்டனத்திற்குரியது.

எனவே, மடத்துக்குளம் தாலுகாவில் அறிவிக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமை உடனடியாகநடத்த வேண்டும். முகாம் நடைபெறும் தேதி, இடம் ஆகியவை குறித்துமுன்கூட்டியே முறையான அறிவிப்பு வெளியிடுவதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இனிவரும் காலங்களில் அறிவிக்கப்பட்ட முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் நலனையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள், அவர்களை அலைக்கழிக்கும் வகையில்செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.