தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்க கோரிக்கை

11 Jun 2026, 11:26 pm
விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு  மனைப்பட்டா வழங்க கோரிக்கை
<p><strong>விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்க கோரிக்கை</strong></p><p>கடலூர், ஜூன் 11- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், நீண்ட காலமாகக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளி களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, விருத்தாசலம் வட்டாட்சி யரிடம் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்துச் சங்க நிர்வாகிகள் தெரி விக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 63 மாற்றுத்திறனாளிகள் இலவச மனைப்பட்டா வேண்டி விண்ணப்பித்தனர். இதில் 9 நபர்களுக்கு வி.குமாரமங்கலத்தில் பட்டா வழங்கப்பட்டது. 33 நபர்களுக்குச் சித்தேரி குப்பத்தில் வழங்க மாவட்ட ஆட்சியரின் முன்மொழிவுக்கு அனுப்பப் பட்டுள்ளது. மீதமுள்ள 21 நபர்களுக்கு மாத்தூர் மற்றும் பூவனூர் கிராமங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு பட்டா வழங்கப்படும் என முன்னதாகத் தெரி விக்கப்பட்டது. எனினும், இதுவரை பட்டா வழங்கப்படாததால், இது குறித்துத் தற்போதைய வட்டாட்சியர் பிரகாஷிடம் முறையிடப்பட்டது. அவர் உடனடியாக விசாரணை செய்து பட்டா வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பயனாளிகளின் மனு, ரேஷன் கார்டு நகல் மற்றும் அடையாள ஆவ ணங்களைச் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் வியாழக்கிழமை வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.கலைச்செல்வன், பழங்குடி மக்கள் சங்க மாவட்ட செயலாளர் என்.எஸ். அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.