தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் வீடுகள் கட்டித் தர வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தல்

8 Oct 2026, 9:25 pm
வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் வீடுகள் கட்டித் தர வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தல்
<p><strong>வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் வீடுகள் கட்டித் தர வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தல்</strong></p><p>சிவகாசி, அக்.8-விருதுநகர் மாவட்டத்தில் மாற் றுத் திறனாளிகளுக்கு வழங்கப் பட்ட பட்டா நிலங்களை அளவீடு செய்து, அதில் வீடுகள் கட்டித் தர வேண்டும். வீட்டுமனை கோரி மனு அளித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.சிவகாசி சாட்சியாபுரத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு ஏ.மாரிமுத்துபாண்டியன் தலைமை வகித்தார். மாநகர நிர்வாகிகள் வதிஷ்ட ராஜன், மாரிமுத்து, குணசேகரன், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகரச் செயலாளர் ஸ்ரீதேவிவரவேற்றார்.</p><p>மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநிலத் தலைவர் டி.வில்சன் பேசினார். மாவட்டத் தலைவர் பி.நாகராஜ் விளக்கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கருப்பையா,டி.என்.பி.டி.எப்.சார்பில் ராஜேஷ் பேரூராட்சி, நகராட்சிகளுக்குச் சொந்தமான கடைகளில் 4 சதவீதம் கடைகளை மாற் றுத் திறனாளிகளுக்குஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்டப் பொருளாளர் கே.ஆரோக்கியராஜ், மாவட்ட நிர்வாகிகள் பி.எஸ்.சுப்புராஜ், பி.சரவணன்,ஏ.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முத்துப்பாண்டி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.