முந்தய பக்கம்

100 நாள் வேலை கேட்டு மனு

19 May 2026, 9:57 pm
100 நாள் வேலை கேட்டு மனு
<p><strong>100 நாள் வேலை கேட்டு மனு</strong></p><p>ஈரோடு, மே 19- ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் மனு அளிக்கும் இயக்கத் தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் 100 நாள் வேலைதிட்டத் தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தி னர் செவ்வாயன்று மனு அளிக்கும் இயக்கத்தில் ஈடுபட்டனர். பவானிசாகரில் நடைபெற்ற இவ்வியக் கத்திற்கு சங்கத்தின் ஒன்றிய துணைச்செயலாளர் பி.பிரபு தலைமை வகித்தார். சங்கத்தின் வட்டார செயலாளர் ஆர்.ரமேஷ், அனைத்துவகை தொழிலா ளர் ஐக்கிய தொழிற்சங்க நிர்வாகி பி.காசி விசுவநா தன், மாநிலக்குழு உறுப்பினர் டி.சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டு, பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு அளித்தனர். முடிவில், ஒன்றியப் பொருளாளர் டி.மயில்சாமி நன்றி கூறி னார். அதேபோல், அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி தலைமையில், மனு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். அந்தியூர், சத்தி வட்டார வளர்ச்சி அலு வலர்களிடமும் மனு கொடுக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram