தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆதரவு

10 Apr 2026, 5:30 am
பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆதரவு

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆதரவு

பொள்ளாச்சி, ஏப்.9- பொள்ளாச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் ஈ.ஈஸ்வரன் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள திமுக கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் வேட்பாளர் கே. நித்தியானந்தத்திற்கு ஆதரவு தரும் நிகழ்வு பதினொன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.மான்சிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொள்ளாச்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் கே. நித்தியானந்தம் கலந்து கொண்டார்.

இதில், வேட்பாளர் கே.நித்தியானந்தம் பேசும்போது, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை வெற்றி பெற்றவுடன் சட்டமன்றத்தில் பேசுவேன். ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வாழ்வாதாரம் மேம்பட பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் முடிவில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் வேட்பாளர் பயனாடை அணிவித்து அவர்களது ஆதரவும், வாழ்த்தும் பெற்றார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்புருஷோத்தமன், தாலுகா செயலாளர் மு.அன்பரசன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்க தாலுகா பொறுப்பாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.