முந்தய பக்கம்

எம்எல்ஏ-விடம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு

12 Jun 2026, 10:56 pm
எம்எல்ஏ-விடம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு

எம்எல்ஏ-விடம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு

விழுப்புரம், ஜூன் 12- மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை களைச் சட்டமன்றத்தில் ஒலிக்கக் கோரி, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிச்சாமியிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் மனு அளித்தனர். மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், ஆந்திர அரசைப் போல மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை ரூ. 6,000, 10,000, 15,000 என உயர்த்தி வழங்க வேண்டும், 125 நாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக வேலை தர வேண்டும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஏ.ஏ.ஒய் குடும்ப அட்டை வழங்கி 35 கிலோ இலவச அரிசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.முருகன் மற்றும் சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram