தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு

13 Jun 2026, 11:30 pm
மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு

தஞ்சாவூர், ஜுன் 13-

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்களிடம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர், 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை

களுக்கான சங்கத்தின் சார்பில், மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறை

வேற்றக் கோரி தமிழகம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.

அண்ணாதுரை மற்றும் பேரா

வூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.

அசோக்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

இந்த மனுவில், “மாதாந்திர உதவித்தொ

கையை 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்களை மாநிலம் மற்றும் ஒன்றிய அளவில் மாதந்தோறும் நடத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தடையின்றி வேலை வழங்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் சாய்வுதளங்கள் அமைக்க வேண்டும், சுற்றுலாத் தலங்களில் அவர்களுக்குக் கட்டணமில்லா அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எழுப்பி, உரிய தீர்வு பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.