நிலத்தை அளந்து வீடுகள் கட்டித்தர வேண்டும் மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்
yesterday
<p><strong>நிலத்தை அளந்து வீடுகள் கட்டித்தர வேண்டும் மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>விருதுநகர், ஜூன் 22- மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்பட்ட இல வச வீட்டுமனைப் பட்டா நிலங் களை அளந்து ஒப்படைத்து, அதில் வீடுகள் கட்டித்தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து வகை மாற் றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச் சங் கத்தினர் மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.நாக ராஜ் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: “மாற்றுத் திறனாளி களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும், இதுவரை அந்த நிலங்கள் அளந்து ஒப்ப டைக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதி காரிகள் உடனடியாக நிலங் களை அளந்து வழங்கி, பய னாளிகளுக்கு வீடுகள் கட் டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிவகாசி சாலை யோர பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் சிறு வணிகக் கடைகள் அமைத்து வாழ்வா தாரம் மேற்கொள்ள அனு மதி வழங்க வேண்டும். அதே போல், வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்துள்ள தகு தியான மாற்றுத் திறனாளி களுக்கும் உடனடியாக இல வச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.</p>
