தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த சட்டப்பேரவையில் குரலெழுப்ப மாற்றுத்திறனாளிகள் சங்கம் மனு!

16 Jun 2026, 12:05 am
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த சட்டப்பேரவையில்  குரலெழுப்ப மாற்றுத்திறனாளிகள் சங்கம் மனு!
<p><strong>மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த சட்டப்பேரவையில் குரலெழுப்ப மாற்றுத்திறனாளிகள் சங்கம் மனு!</strong></p><p>திருப்பூர், ஜூன் 15- மாதாந்திர உதவித் தொகையை உயர்த்துவது உள் ளிட்ட கோரிக்கைகளைச் சட்ட மன்றத்தில் ஒலிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட எம்.எல்.ஏ-க்களிடம் மனு அளித்தனர். மாநிலக் குழு சார்பில் முதல்வரி டம் அளிக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை உயர்வு, இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு களை ’ஏ.ஏ.ஒய்’ கார்டுகளாக மாற்றுதல், அரசு அலுவலகங் களில் தடையற்ற சூழல் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை, ஜூன் 18-ல் கூடும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் அனைத்து உறுப்பி னர்களும் பேசி அரசின் கவனத் திற்குத் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்காக அவிநாசி, திருப் பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதி எம்எல்ஏக்களிடம் மனு அளித்த னர். முன்னதாக திருப்பூர் தெற்கு எம்எல்ஏ பாலமுருகனை சந்தித்து மனு அளிக்கையில், மாற்றுத்திற னாளிகள் சங்கத்தின் மாநில செய லாளர் பா.ராஜேஷ், மாவட்டத் தலைவர் ஏ.லோகநாதன், மாவட் டச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் பி.ரோஸி, அவிநாசி ஒன்றிய தலைவர் சசி குமார், துணைத் தலைவர் ஜோதி, துணைச்செயலாளர் சந்திரகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.