பயிற்சி விமானம் விபத்து விமானி பாதுகாப்பாக தப்பினா
14 Nov 2025, 1:26 pm
<p><strong>பயிற்சி விமானம் விபத்து விமானி பாதுகாப்பாக தப்பினார்</strong></p>
<p>சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே வெள்ளிக்கிழமை மதியம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையின் பிசி-7 எம்கே II பயிற்சி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கீழே விழுந்து முழு மையாக சேதமடைந்தது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை அறிந்த விமானி, பாராசூட்டுடன் வெளியே குதித்த நிலையில், விமானம் சேறு அதிகம் நிறைந்த பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. தாம்பரம் பகுதியில் இயங்கி வரும் இந்திய விமானப்படை பயிற்சிப் பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த பயிற்சி விமா னம் திருப்போரூர் பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கோளாறு ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ மாக தெரிவித்துள்ளது.</p>
