முந்தய பக்கம்

‘ஆபிரகாம் லிங்கனை’ தாக்கியது ஈரான்?

13 Mar 2026, 4:52 pm
‘ஆபிரகாம் லிங்கனை’ தாக்கியது ஈரான்?

‘ஆபிரகாம் லிங்கனை’ தாக்கியது ஈரான்?

டெஹ்ரான், மார்ச் 13 - அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க் கப்ப லான ‘ஆபிரகாம் லிங்க’னை ஏவு கணை மூலம் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  “ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் ஆபிரகாம் லிங்கன் கப்பலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்கு தலால் அந்தக் கப்பல் செயல்பட முடி யாத நிலைக்குத் தள்ளப்பட்டு, பிராந்திய கடற்பரப்பிலிருந்து பின்வா ங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளா னது” என இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளதாக ‘பிரஸ் டிவி’ தெரிவித்துள்ளது.  மேலும், ஈரானின் மத்தியத் தலை மையகம் வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வ அறிக்கையின்படி, ஓமன் கடலில் ஈரானின் கடல் எல்லையி லிருந்து சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட நவீன ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் பயன்படுத்தப் பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தையும் சுட்டு வீழ்த்தியது 1950

-களில் இருந்து அமெரிக்க விமானப்படையின் முதுகெலும்பாக விளங்கும்  கேசி-135 ஸ்ட்ராடோடேங்கர் (KC-135 Stratotanker) ரக எரிபொருள் நிரப்பும் விமானத்தையும் ஈராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவுக் குழுக்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை  அறிவித்துள்ளது. அந்த விமானத்தில் இருந்த 6 பணியாளர்களும் கொல்லப்பட்ட னர். ஒரு போர் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த போது இந்த் தாக்குதலை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. முதலில், இந்தச் சம்பவத்தை மறைத்து வந்த அமெரிக்கா, பின்னர் மேற்கு ஈராக்கில் தனது விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதாக கூறியுள்ளது. ஒரு விமானம் ஈராக்கில் விழுந்ததாகவும், மற்றொரு விமானம் இஸ்ரேலில் தரையிரங்கியதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) மழுப்பல் பதிலை தெரிவித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram