சமூக ஜனநாயகத்திற்கான உரையாடல்தான் இன்றைய தேவை! சிக்கண்ணா கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் அறிவுறுத்தல்
9 Jan 2026, 3:41 pm
<p><strong>சமூக ஜனநாயகத்திற்கான உரையாடல்தான் இன்றைய தேவை! சிக்கண்ணா கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் அறிவுறுத்தல்</strong></p>
<p>திருப்பூர், ஜன.9- சமூக ஜனநாயகத்திற்கான உரை யாடல்தான் இன்றைய தேவை என்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் கிருஷ்ணன் கூறினார். திருப்பூரில் கடந்த ஞாயிறன்று வாச கர் சிந்தனைப் பேரவை நிகழ்வில் பங் கேற்று, பிரின்ஸ் கஜேந்திரபாபு தொகுத் திருக்கும் ‘சமூக ஜனநாயக கையேடு’ என்ற நூலை அறிமுகம் செய்து, டாக்டர் கிருஷ்ணன் பேசியபோது குறிப்பிட்டதாவது: சமூக ஜனநாயகக் கையேடு படுகுழியில் தள்ளிக் கொண் டிருக்கும் சாதி பற்றி மிக அநாய சமாக பேசியிருக்கும் புத்தகம், ஆசிரி யர்கள், மாணவர்கள் படிக்க வேண்டிய கையேடு. இளைய சமுதாயத்தை மூளைச்ச லவை செய்வது சுலபம். அறியாமை யில் இருப்பவர்களை மூளைச் சலவை செய்தால் அவரிடத்தில் நல்ல நம்பிக் கையை விட மூடநம்பிக்கையும், எதிர் மறை எண்ணமும் உருவாகும். பொய் யைத் திரும்பத் திரும்ப சொல்லும் போது அவர்களை மடை மாற்றம் செய்ய முடியும். கல்லூரிகளில் பல்க லைக் கழகங்களில் முனைவர் பட்டம் படித்தாலும் கூட அவர்களிடம் சாதிய சிந்தனை மறையாமல் இருக்கிறது. சிறு குழந்தைகளாக இருப்பவர்களிடம் ஆரம்பத்திலேயே சொல்லிக் கொடுக் கும்போதுதான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். கோயில்களில் கூட்டம் நிறைய வந்து கொண்டிருப்பதற்கு பக்தி மட்டும் காரணமல்ல, பயமும்தான் காரணம். வள்ளுவர் கற்க கசடற என்பதில் கற்பி என்று சொல்லவில்லை. கற்க கசடற என்பதை சரியாக படிக்காததால்தான், வள்ளுவர் இந்த தர்மத்தைச் சொல்லி இருக்கிறார், அந்த தர்மத்தைச் சொல்லி இருக்கிறார் என்று கூறிக் கொண்டிருக்கிறோம். சாதியத்துக்கு எதிரான உறுதிமொழிகளும் கல்லூரிக ளில் சடங்குத்தனமாக மாறியிருக்கிறது. சிந்திக்க வைப்பதுதான் இன்றைய தேவை. கேள்வி கேட்கக்கூடிய தன்மை தேவை. ரத்தத்துக்கு சாதியில்லை, மனி தம் மட்டுமே இருக்கிறது. ரத்தத்தி லேயே சாதிய குணம் ஊறியிருக்கிறது என்று சொல்வது அறிவியல் பார்வை யல்ல. இளைய தலைமுறையை சிந்திக் கச் செய்து விட்டால் பின்னால் கவலைப் பட வேண்டியதில்லை. பெயரில் என்ன இருக்கிறது என்கி றோம், ஆனால் பெயரில் ஆயிரம் இருக் கிறது. பெயரில் அரசியல் இருக்கிறது. இதனால்தான் தமிழ்ப் பெயர் வைக்க இயக்கம் தோன்றியது. தமிழ்ப் பெயரை குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும். அதன் மூலம் மேலோட்டமாக சாதி யத்தை சொல்லும் அடையாளத்தை தடுக்கலாம் . அரசமைப்பு என்பது வெறும் வழக்க றிஞர்களுக்கான ஆவணமல்ல, அது வாழ்க்கைக்கான வாகனம். தேடல் தான் கல்வியினுடைய அடிப்படை, அறிவியல் பூர்வமாக சிந்திக்கத் தொடங் கினால் நாம் எல்லோரும் மனிதர் கள்தானே. சமூக ஜனநாயகத்திற்கான உரையாடல்தான் தேவை. எனவே சமூக ஜனநாயகக் கையேடு பாடமாக மட்டு மல்ல, இதை வேதமாக கொண்டு படிக்க வேண்டும். மாணவர்கள் மனதில் பதியக்கூடிய விதத்தில் ஆசிரியர்களும் எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.</p>
