தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய பாஜக அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்

7 Jun 2026, 9:42 pm
ஒன்றிய பாஜக அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்

ஒன்றிய பாஜக அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்

புதுதில்லி நீட், சிபிஎஸ்இ முறைகேடுகள் தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட் டம் தொடரும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஞாயிறன்று அறி வித்துள்ளது.

இதுதொடர்பாக அக் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கூறுகையில்,”தில்லி ஜந்தர் மந்த ரில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர் மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி எங்கள் கட்சி சார்பில் சனி யன்று நடைபெற்ற போராட்டத்தில் 7,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நாடு தழுவியதாக மாறும்.

தர்மேந் திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை நாங்கள் பின்வாங்க மாட் டோம். இந்த போராட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வதற் கான அடுத்தகட்ட செயல் திட் டத்தை நாங்கள் விரைவில் வெளி யிடுவோம்” என அவர் கூறினார். பாதுகாப்பு அதிகரிப்பு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யின் நிறுவனர் அபிஜித் தீப்கே விற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக மகா ராஷ்டிராவின் எம்ஐடிசி வாலுஜ் காவல் நிலைய அதிகாரி கூறுகை யில்,”அபிஜித் தீப்கேவிற்கு ஞாயி றன்று முதல் அவரது இல்லத்திற் கான பாதுகாப்பை அதிகரித்துள் ளோம். முன்னதாக 11 பாதுகாப்புப் பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டிருந்தனர்.

தற்போது அந்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள் ளது. பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டுள்ளவர்கள் உள்ளூர் காவல் நிலையம், மாநகர காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்தவர் கள்” என்று அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.