முந்தய பக்கம்

தர்மேந்திர பிரதான் பதவிவிலகக் கோரி ஆர்ப்பாட்டம்

18 Jul 2026, 9:04 pm
தர்மேந்திர பிரதான் பதவிவிலகக் கோரி ஆர்ப்பாட்டம்
<p><strong>தர்மேந்திர பிரதான் பதவிவிலகக் கோரி ஆர்ப்பாட்டம் </strong></p><p>நீட் வினாத்தாள் கசிவு, கியூட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடி களுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமையன்று (ஜூலை 18) எழும்பூர் ராஜரத்தி னம் மைதானம் முன்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். மருத்துவர் அமலோற்பநாதன், எழுத்தாளர் கொற்றவை, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. திருவேட்டை, ஆர். முரளி, இ. சர்வேசன், கே. முருகன், எழும்பூர் பகுதிச் செயலாளர் வே. ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.​​​​​​​</p>
Share
FacebookXWhatsAppTelegram