தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தர்மேந்திர பிரதானே பதவி விலகு; மோடி அரசே நீட் தேர்வை ரத்து செய்! தமிழகத்திலும் மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டம்

22 Jul 2026, 9:10 pm
தர்மேந்திர பிரதானே பதவி விலகு; மோடி அரசே நீட் தேர்வை ரத்து செய்!  தமிழகத்திலும் மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டம்

தர்மேந்திர பிரதானே பதவி விலகு; மோடி அரசே நீட் தேர்வை ரத்து செய்! தமிழகத்திலும் மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டம்

காவல்துறை கடும் அடக்குமுறை; கல்லூரிகளுக்குள் புகுந்து கைது!

சென்னை, ஜூலை 22 - நீட் முறைகேடுகளுக்கும், கியூட், சிபிஎஸ்சி தேர்வு குளறுபடிகளுக்கும் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் தேசிய தேர்வு முகமையை (NTA) கலைக்க வேண்டும் என தில்லியில் மாணவர்கள் - இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடு தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்திலும் புதன்கிழமை (ஜூலை 22) அன்று, 2-ஆவது நாளாக இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இப்போராட்ட ங்களில் கலந்து கொண்ட நிலையில், அவர்களை தமிழக அரசின் காவல்துறை வலுக்கட்டாயமாக கைது அராஜகத்தில் ஈடுபட்டது. காவல்துறை யினர் நடத்திய தடியடி மற்றும் தாக்குதலில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தமிழகத்தில் போராட்ட அலை

தமிழ்நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு முதலே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் இறங்கினர். சென்னை எழும்பூரில் செவ்வாயன்று (ஜூலை 21) வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக், பொருளாளர் தீ. சந்துரு, மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது உள்ளிட்டோர் தலைமையேற்ற கண்டனப் பேரணி நடைபெற்றது. பேரணியின் நிறைவாக, ஆல்பர்ட் திரையரங்கம் அருகே அவர்கள் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். இதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், கடுமையான தாக்குதல் நடத்தி அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்; பின்னர் நள்ளிரவில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த சென்னை பல்கலைக்கழக மாணவர் மோகன்தாஸ், சட்டக்கல்லூரி மாணவர் சக்தி, தனியார் கல்லூரி மாணவி அமிர்தா மற்றும் காவலர் ஒருவரால் கடிக்கப்பட்டு காயமடைந்த வினோத் ஆகிய 4 பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாவது நாளாக தொடர்ந்த போராட்டம்

இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 48 மணி நேரக் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று மாணவர் மற்றும் வாலிபர் சங்கங்கள் அறிவித்தன. அதன்படி, தில்லி மாணவர்களுக்கு ஆதரவாகவும், இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் மீது சென்னை காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் புதனன்று சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தலைமைச் செயலகம், கிண்டி ஆளுநர் மாளிகை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை, அம்பத்தூர், திருவெற்றியூர் ஆகிய இடங்களில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். வேலூர், திருவாரூர்தி, திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கால் ஜவ்வு கிழிந்தது

எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு போராட்டம் நடத்த முயன்ற மாணவர் சங்க மாநிலத் தலைவர் சி. மிருதுளா, வாலிபர் சங்கப் பொருளாளர் தீ. சந்துரு தலைமையில் திரண்ட 100-க்கும் மேற்பட்டோருக்குக் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். மாணவர்கள் வாலிபர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் அவர்களைச் சாலையில் இழுத்துச் சென்று கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளு-முள்ளுவில் மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் அமர்நீதி என்பவருக்கு வாய் மற்றும் பற்களில் இருந்து ரத்தம் கொட்டியதுடன், கால் ஜவ்வு கிழிந்து துடிதுடித்தார்.

மேலும் 2 பேர் காயம்

இதன்பிறகு, மாணவர் சங்கச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது, வாலிபர் சங்கச் செயலாளர் எஸ். கார்த்திக் தலைமையில் மாணவர்களும் வாலிபர்களும் அணி அணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த அமர்நீதி, விக்னேஷ் உள்ளிட்டோர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை காமராசர் பல்கலை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்குள் இருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ. டீலன் ஜெஸ்டின், மாவட்டச் செயலாளர் சி. டேவிட் ராஜதுரை ஆகியோரையும், வாலிபர் சங்க நிர்வாகி இரவியையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், காவல்துறை கைது செய்தனர். இதேபோல திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருவெறும்பூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களிலும், போராடிய மாணவர்கள் - இளைஞர்களை, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். திருவாரூரில் மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் புதனன்று (ஜூலை 22) சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் 3-ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.