நூறு நாள் வேலை வழங்கக்கோரி பெண்கள் மனு
4 Jun 2026, 11:22 pm

தருமபுரி, ஜூன் 4-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வேலை வழங்கக்கோரி பண்டஅள்ளி ஊராட்சியை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பண்டஅள்ளி ஊராட்சியில் பண்டஅள்ளி, பங்கு நத்தம், குறிஞ்சிபுரம், ஒ.நாகர்கூடல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு அனைத்து சமூக மக்களும் வசித்து வருகின்றனர். சுமார் 500 பெண்கள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அட்டை வைத்துள்ளனர்.

இங்கு பலருக்கும் சொந்த விவசாய நிலம் இல்லை. விவசாயி கூலி வேலை செய்தும், நூறு நாள் வேலைத்திட்டத்தின் மூலம் வேலை செய்தும், அதில் வரும் ஊதியத்தில்

குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டில் பத்து நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். பண்டஅள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடும் பணியை என்ஜிஓ செய்கிறது. அப்பணியை எங்களுக்கு வழங்க வேண்டும். மேலும், எங்கள் கிராமங்களில் உள்ள ஏரிகள் தூர்வாரும் பணியை செய்ய அனுமதித்து, எங்களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.