தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிராம புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை மீட்கக் கோரி மனு

8 Jun 2026, 10:59 pm
கிராம புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை மீட்கக் கோரி மனு
<p><strong>கிராம புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை மீட்கக் கோரி மனு</strong></p><p>தருமபுரி, ஜூன் 8- கூத்தப்பாடி கிராமத்திற்கு சொந்த மான 6 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்துள் ளதாக கூறி, அந்த ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டுத் தர வலி யுறுத்தி கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட கூத் தப்பாடி கிராமத்தின் சர்வே எண் 1181-ல், ஒகேனக்கல் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை ஒட்டி சுமார் 6 ஏக்கர் பரப்பள விலான அரசுப் புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை எங் கள் கிராமத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் நீண்டகாலமாக தங்க ளது ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நில மாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கிராமப்புற இளைஞர்கள் தங்களது விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் இந்த இடத் தையே பயன்படுத்தி வந்தனர். வருங் காலத்தில் கிராமத்தின் தேவைக்கேற்ப சமுதாயக் கூடம், அரசுப் பள்ளி, அங் கன்வாடி மையம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற பொதுக் கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற் காகவே இந்த நிலம் ஒதுக்கப்பட்டி ருந்தது. இத்தகைய சூழ்நிலையில், பொதுப் பயன்பாட்டிற்கான அந்த புறம் போக்கு நிலத்தை தனிநபர்கள் சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், சில அதிகாரிக ளின் உதவியால் அந்த நிலத்திற்கு தனிநபர் சிலரின் பெயர்களில் பட்டா வும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகி றது. கிராமத்தின் எதிர்கால தேவைக ளுக்காகவும், பொதுப் பயன்பாட்டிற் காகவும் ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிர மித்து வழங்கப்பட்டுள்ள போலிப் பட்டாக்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன், ஆக்கிரமிப்பு களை முழுமையாக அகற்றி, அந்த நிலத்தை கிராம மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கு மீட்டுத் தர மாவட்ட நிர் வாகம் போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.