தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி: பொதுமக்கள் அவதி

11 May 2026, 12:16 am
ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி: பொதுமக்கள் அவதி

ஆமை வேகத்தில் மேம்பாலப் பணி: பொதுமக்கள் அவதி

-ஜி.லெனின்- தருமபுரி, மே 10- தருமபுரி, பாரதிபுரம் - வெண் ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் ரூ.36.15 கோடி மதிப்பீட்டில் அமைக் கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தருமபுரியில், பிரதான நகரங் களை இணைக்கும் முக்கிய நான்கு இடங்களில், ரயில்வே பாதையை கடந்து சாலை செல்கிறது.

வெண் ணாம்பட்டி, குமாரசாமிபேட்டை, கடகத்தூர், அதியமான்கோட்டை ரயில்வே கேட்டை கடந்தபடி, இந்த ரயில் பாதை செல்கிறது.

வெண் ணாம்பட்டியை தவிர மீதமுள்ள 3 இடங்களிலும், ரயில்வே மேம்பா லம் அமைக்கப்பட்டு, பயன்பாட் டில் உள்ளது.

வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் மேம்பாலப் பணிகள் மட்டும் கிடப்பில் இருந்தது.

வெண் ணாம்பட்டி ரயில்வே கேட், தரும புரி ரயில் நிலையம் அருகே அமைந் துள்ளதால், அடிக்கடி ரயில்வே கேட் பூட்டப்படுகிறது.

இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் நீண்டநேரம் வரிசையில் காத்தி ருப்பது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக, பள்ளி நேரங்களில் நூற் றுக்கணக்கான வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.

இந்த வழியாக பயணிகள் ரயில், விரைவு ரயில், சரக்கு ரயில்கள் கடந்து செல்லும் போது, நாளொன்றுக்கு 36 முறை இப்பாதை அடைத்து திறக்கப்படு கிறது.

அப்போது 15 நிமிடங்களும், சில ரயில்கள் கடக்கும் போது சுமார் 30 நிமிடங்களும் ஆவதால், தருமபுரி நகரிலிருந்து வெண்ணாம்பட்டி குடி யிருப்பு பகுதி, ஆயுதப்படை குடியி ருப்பு பகுதி, குள்ளனூர், தோக்கம் பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல் லும் வாகனங்கள், இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற் கின்றன.

பொதுமக்களுக்கு ஏற்ப டும் சிரமத்தை போக்க, வெண் ணாம்பட்டி ரயில்வே கேட் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பாரதிபுரத் தில் 66 அடி தார்ச்சாலையிலிருந்து, வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதான நுழைவு வாயில் வரை மேம்பாலம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தமிழக அரசு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

நிலம் எடுத்த வர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுவிட்டது.

தற்போது பாரதிபுரம் – வெண் ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, ஆமை வேகத் தில் நடைபெற்று வருவதால் அப் பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர். பாலம் அமைக்கும் சாலை அருகே போக்குவரத்து கழக புறநகர் பணி மனை அமைந்துள்ளது.

சாலையின் நடுவே மண் கொட்டி வைக்கப்பட் டுள்ளதால் வாகனங்கள் செல்லும் போது மண்புழுதி பறக்கிறது.

மேலும், பணி நடைபெற்று வரும் சாலையானது பல்வேறு தெருக்க ளின் இணைப்பு சாலையாக உள் ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பாதாள சாக்கடை திட்டக்குழாய் கள் சேதமடைந்துள்ளன.

எனவே, மேம்பாலம் அமைக்கும் பணியை விரையில் முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ள னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.