மந்தகதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்: விரைந்து முடிக்க வலியுறுத்தல்
7 Jun 2026, 12:16 am
<p><strong>மந்தகதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்: விரைந்து முடிக்க வலியுறுத்தல்</strong></p><p>மந்தகதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்: விரைந்து முடிக்க வலியுறுத்தல் தருமபுரி, ஜூன் 6- தருமபுரி நகரில் மந்தகதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால், திட் டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர். தருமபுரி நகராட்சியில் 33 வார்டு களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நக ரில் உருவாகும் கழிவுநீரை முறை யாக சேகரித்து சுத்திகரிக்கும் நோக் கில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதற் கட்ட பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் 19 வார்டுகள் மட்டுமே முழுமையாக பயன்பெற்றன. தற்போது மீத முள்ள பகுதிகளுக்கும், ரூ.82.15 கோடி மதிப்பில் 2 ஆம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2,3 வார்டு மற்றும் 10 ஆவது வார்டு முதல் 33 ஆவது வார்டு வரை 2 ஆம் கட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தருமபுரி எஸ்.வி. சாலை நகரின் முக்கிய சாலையாக உள்ளது. இச் சாலையில் கோட்டாட்சியர், வட் டாட்சியர், சார்பதிவாளர், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளன. மேலும், ஏராளமான தனியார் மற் றும் அரசுப்பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இச் சாலையானது ஏராளமான கிரா மங்களுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. இப்பகுதியில் ஏராள மான தெருக்களில் ஆயிரக்கணக் கான வீடுகள் உள்ளன. இப்படியுள்ள சூழ்நிலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக எஸ்.வி. சாலையில் குழிகள் தோண் டப்பட்டுள்ள. மண் மற்றும் கட்டு மானப் பொருட்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. இந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பல மாதங்களாக மந்த கத்தியில் நடைபெற்று வருவ தால், காலை மற்றும் மாலையில் இவ்வழியாக செல்லும் பள்ளி வாக னங்கள், இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்வோர் என போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே, மந்த கதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியு றுத்தியுள்ளனர்.</p>
