அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச்சட்டப்படி பட்டா வழங்கிடுக பழங்குடியினர் கூட்டமைப்பினர் போராட்டம்
1 hour before

அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச்சட்டப்படி பட்டா வழங்கிடுக பழங்குடியினர் கூட்டமைப்பினர் போராட்டம்

தருமபுரி, ஜூலை 31-பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச்சட்டத்தின் கீழ், பட்டா வழங்கக்கோரி, பழங்குடியினர் கிராமசபை கூட்டமைப்பின் சார்பில் வெள்ளியன்று மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம்,பாலக்கோடு பகுதிகளில்இருளர் சமூகத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் எண்ணற்றோர் வசித்து வருகின்றனர். மேலும், தருமபுரி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் மலையாளி, குருமன்ஸ் உள்ளிட்ட பழங்குடியினர் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். தாங்கள்நீண்ட காலமாக அனுபவித்து வரும்நிலங்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும். நிலம் மற்றும் வீடு இல்லாத பழங்குடியினருக்கும் அதே சட்டததின் அடிப்படையில் நில உரிமை வழங்க வேண்டும் என மாவட்டநிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், பழங்குடியினர் கிராமசபை கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்நடைபெற்றது.பாலக்கோடு மற்றும் பென்னகரம் வட்டங்களில் இருந்து 850 மனுக்களும், தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டங்களிரிருந்து 1,000 மனுக்களும்,பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் வட்டங்களில்இருந்து 4,500 மனுக்களும் எனமொத்தம் 6,350 மனுக்கள், தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் வழங்கப்பட்டன. இப்போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்டத்தலைவர் அம்புரோஸ், மாவட்ட துணைத்தலைவர் கண்ணகி, பழங்குடியினர் கிராமசபை கூட்டமைப்பின் தலைவர்கள் முத்துவேடி, அசோக்குமார், நாராயணன்,சின்னமுனியன், முருகன், சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.