பணி நிறைவு பாராட்டு விழா
29 May 2026, 11:16 pm
<p><strong>பணி நிறைவு பாராட்டு விழா</strong></p><p>தருமபுரி, மே 29- போக்குவரத்துத்துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற சி.நாகராசன் மற்றும் சி.முரளி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத்தலைவர் சி.நாக ராசன் மற்றும் தருமபுரி மாவட்ட துணைத் தலைவர் சி.முரளி ஆகியோரின் பணி நிறைவு பாராட்டு விழா தருமபுரி வாணியர் மஹா லில் வெள்ளியன்று நடைபெற்றது. தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் தரும புரி மண்டலத்தில் நடத்துநராக பணியாற்றி சி.நாகராசன் ஓய்வு பெற்றார். அதேபோன்று, தருமபுரி நகர பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக சி.முரளி பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு, போக்குவரத்து சங்க மண்டலச் செயலாளர் சி. ரகுபதி தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர் கே.வெங்கடா சலபதி வரவேற்றார். சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் அ.சவுந்தரராஜன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.முத்துக்கண்ணன், சிஐ டியு மாநில துணை பொதுச்செயலாளர் வி. குமார், மூத்த தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபா லன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.கலாவதி உள்ளிட்ட சகோதர தொழிற்சங்க தலைவர் கள் பங்கேற்று வாழ்த்தி பேசினர். முடி வில், சி.நாகராசன் மற்றும் சி.முரளி ஆகியோ ருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சிஐ டியு போக்குவரத்து ஊழியர் சங்க பொருளா ளர் என்.மயில்சாமி நன்றி கூறினார்.</p>
