தெருக்களில் ஆறாக ஓடும் கழிவுநீர் நோய் பரவும் அபாயத்தால் மக்கள் தவிப்பு
8 Jun 2026, 1:01 am
<p><strong> தெருக்களில் ஆறாக ஓடும் கழிவுநீர் நோய் பரவும் அபாயத்தால் மக்கள் தவிப்பு</strong></p><p>தருமபுரி, ஜூன் 7 – தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி ஒன்றியம், பாளையம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட தொம்பரக் கம்பட்டி கிராமத்தில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாத தால், தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடி நோய் தொற்று ஏற் படும் அபாயம் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். தொம்பரக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக ளுக்கு இடையே முறையான வடி கால் அல்லது கழிவுநீர் கால்வாய் வசதி இதுவரை ஏற்படுத்தி தரப் படவில்லை. இதனால், வீடுகளில் இருந்து தினசரி வெளியேறும் கழிவுநீரானது தெருக்களிலேயே தேங்கி, ஆறாக வழிந்தோடி வருகி றது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற் றம் வீசுவதுடன், ஈக்கள் மற்றும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி யாகி வருகின்றன. இதன் விளைவாக, அப்பகுதி யில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச் சல் மற்றும் பல்வேறு உடல் உபா தைகள் ஏற்பட்டு வருவது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இப் பகுதியில் உள்ள பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பொதுமக்கள் சுகாதார மாக இருக்க வேண்டும் என பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டாலும், தேங்கும் கழிவுநீரால் நோய் பரவல் கட்டுக்கடங்காமல் போகும் சூழல் நிலவுகிறது. இதுகுறித்து பாளையம்புதூர் ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை நேரில் சென்று புகார் அளித்தும், நிலையான கழிவு நீர் கால்வாய் அமைத்துக் கொடுக்க இதுவரை எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கு தொடர்ந்தால், இன்னும் சில மாதங்களுக்குள் இப் பகுதியில் டெங்கு, மலேரியா போன்ற ஆபத்தான காய்ச்சல்கள் பரவி, பொதுமக்களின் உயி ருக்கே ஆபத்து ஏற்படும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்ற னர். எனவே, பெரிய அளவில் நோய் தொற்று பரவல் ஏற்படுவதற்கு முன்பாக, தொம்பரக்கம்பட்டி பகு தியில் தேங்கியுள்ள கழிவுநீரைச் சுத்தப்படுத்த வேண்டும். மேலும், கழிவுநீர் தங்கு தடையின்றிச் செல்ல ஏதுவாக நிரந்தர சிமெண்ட் கால்வாய் வசதியை அமைத்து தர தருமபுரி மாவட்ட நிர்வாகம் போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அவசர கோரிக்கை விடுத் துள்ளனர்.</p>
