திறந்தவெளி கிணற்றால் அவதி: கம்பிவேலி அமைக்க கோரிக்கை
13 May 2026, 1:50 am
<p><strong>திறந்தவெளி கிணற்றால் அவதி: கம்பிவேலி அமைக்க கோரிக்கை</strong></p><p>தருமபுரி, மே. 12- தகடூர் கிராமத்தில் திறந்தவெளி கிணற்றால் அவதியடைவதாகவும், பாதுகாப்பு கம்பிவேலி அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், ஏ.ஜெட்டிஹள்ளி ஊராட்சிக் குட்பட்டது தகடூர் கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்க ளின் பிரதான குடிநீர் ஆதாரமாக காம ராஜர் நகர் பகுதியில் உள்ள பொதுக் கிணறு விளங்கி வருகிறது. இந்த கிணற் றிலிருந்து குழாய் மூலம் தகடூர் ஓம்சக்தி கோயில் வளாகத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண் ணீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப் படுகிறது. தற்போது இந்த குடிநீர் கிணறு எவ் வித பாதுகாப்புமின்றி திறந்த நிலை யில் உள்ளது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குப்பைகளை கிணற்றுக்குள் கொட்டு வதால் குடிநீர் அசுத்தமடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த துயர சம்பவமும் நடந்துள்ளது. இதையடுத்து, மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக் கவும், குடிநீரின் தூய்மையை பாது காக்கவும் கிணற்றைச் சுற்றி கம்பிவேலி அமைக்க வேண்டும் என்று ஏ.ஜெட்டி ஹள்ளி ஊராட்சி நிர்வாகத்திடம் பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி, கடந்த சில தினங்க ளாக குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வா கம் உடனடியாக தலையிட்டு சேதம டைந்த குடிநீர் குழாயைச் சீரமைக்கவும், கிணற்றில் குப்பைகள் கொட்டப்படு வதைத் தடுக்க பாதுகாப்பு கம்பிவேலி அமைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகடூர் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
