தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குளம்போல் தேங்கும் மழைநீரால் அவதி!

24 Sept 2026, 12:57 am
வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குளம்போல் தேங்கும் மழைநீரால் அவதி!

வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குளம்போல் தேங்கும் மழைநீரால் அவதி!

தருமபுரி, செப்.23-தருமபுரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி, குளம்போல்தேங்கி நிற்பதால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும்சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

தருமபுரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினமும்ஏராளமான பொதுமக்கள் பட்டா மாற்றம், சான்றிதழ்கள், நிலம் தொடர்பான பிரச்சனைகள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இதனால் அலுவலகம் முன்புள்ள பகுதிஎப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்தபகுதியாக உள்ளது. கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மழைபெய்யும் நேரங்களில் அலுவலகம்முன்புள்ள சாலையில் மழைநீர் தேங்கி, குளம்போல் காட்சியளிக்கிறது. மழைநீர் முறையாக வடிந்து செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததேஇதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக பொதுமக்கள்தெரிவிக்கின்றனர். தேங்கியுள்ள தண்ணீரை கடந்து அலுவலகத்திற்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால், வயதானவர்கள், பெண்கள்,குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் வருவோரும் தேங்கியுள்ள தண்ணீரால் பாதிக்கப்படுகின்றனர்.தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார பாதிப்பும்ஏற்படும் சூழல் உள்ளது.

மேலும், மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே,தருமபுரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்புள்ள பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். தற்போது தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாகஅகற்றி, சாலையை சீரமைக்க வேண்டும். மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.