தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேலும் ஒரு உயிரை பலிகொண்டது ‘நீட் தேர்வு’ தருமபுரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

21 Jun 2026, 9:04 pm
மேலும் ஒரு உயிரை பலிகொண்டது ‘நீட் தேர்வு’  தருமபுரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
<p><strong>மேலும் ஒரு உயிரை பலிகொண்டது ‘நீட் தேர்வு’ தருமபுரி மாணவி தூக்கிட்டு தற்கொலை</strong></p><p>தருமபுரி, ஜூன் 21- நீட் தேர்விற்கு தயாராகி வந்த தருமபுரியை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள என்டடப்ட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கெலமங்கலத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் ரோஷ்ணி (18), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு, மருத்துவப்படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன், நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார். நீட் தேர்விற்கு சொந்த ஊருக்கு வந்த மாணவி, தருமபுரியில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வை எழுத இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சனியன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ரோஷனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாலக்கோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.