தருமபுரி அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல பொது
8 Jan 2026, 2:44 pm
<p>தருமபுரி அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல பொது மேலாளரின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் சி.ரகுபதி, தலைவர் எஸ்.சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் பெருமாள், முருகன், குமரி, மன்னன், குமார், மூர்த்தி, தமிழ்மணி, மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
