முந்தய பக்கம்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

22 May 2026, 11:35 pm
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
<p><strong>நலத்திட்ட உதவிகள் வழங்கல்</strong></p><p>​​​​​​​தருமபுரி, மே 22- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி கிராமத்தில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இம் முகாமில் 215 பயனாளிகளுக்கு ரூ.93.51 லட்சம் மதிப்பீட் டில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவி களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முன்னதாக, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியர் பார்வையிட்டார். இந்நிகழ்வில், அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், வருவாய் கோட்டாட்சியர் சி.செம்மலை, தனித்துணை ஆட்சியர் (சபாதி) மு.செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram