மகளிர் சுயஉதவிக்குழுவில் ரூ.2.88 கோடி முறைகேடு ஆட்சியரிடம் பெண்கள் புகார்
13 Jul 2026, 10:33 pm

மகளிர் சுயஉதவிக்குழுவில் ரூ.2.88 கோடி முறைகேடு ஆட்சியரிடம் பெண்கள் புகார்

தருமபுரி, ஜூலை 13- நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டி பட்டியி ல் மகளிர் சுயஉதவிக்குழுவில் ரூ.2.88 கோடி முறைகேடு நடந்துள்ள தாகக் கூறி, பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திங்களன்று தரும புரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “எங்கள் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் மூலம் 16 குழுக்களில் 320 பெண்கள் இணைந்து சேமிப்பு பணம் செலுத்தி வந்தோம். இந்நிலையில், எங்களுக்குத் தெரியாமல் வங்கி அதி காரிகளுடன் இணைந்து, குழுத் தலைவி வெண்ணிலா மற்றும் அதற்கு உதவிய என்.ஜி.ஓ. அமைப்பினர் கூடு தல் கடன் பெற்று முறைகேடு செய் துள்ளனர். தற்போது வங்கியிலிருந்து கடனை செலுத்தக் கூறி நோட்டீஸ் வருவதோடு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவற்றை முடக்கி விடுவோம் என அதிகாரிகள் மிரட்டுகின்றனர். இது குறித்து கேட்டபோது தலைவி வெண்ணிலா தலைமறைவாகிவிட்டார். எனவே, எங்கள் சேமிப்புப் பணத்தை மீட்டுத் தரவும், வங்கி கணக்குகள் முடக் கப்படுவதை தடுக்கவும் மாவட்ட நிர் வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்துள்ளனர்.