முந்தய பக்கம்

கழிவுநீர் கால்வாயை தூர்வார வலியுறுத்தல்

2 Jun 2026, 10:20 pm
கழிவுநீர் கால்வாயை தூர்வார வலியுறுத்தல்
<p><strong>கழிவுநீர் கால்வாயை தூர்வார வலியுறுத்தல்</strong></p><p>தருமபுரி, ஜூன் 2- செங்கொடிபுரத்தில் உள்ள கழிவுநீர் கால் வாய்கள் தூர்வாரப் படாததால், வீட்டிற்குள் மழைநீர் நுழைவதால் பொதுமக்கள் சிரமத் திற்குள்ளாகி வருகின்ற னர். தருமபுரி நகராட்சி, செங்கொடிபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கழிவுநீர் கால்வாய், முகமது அலி கிளப் சாலையை கடந்து, பழைய பேருந்து நிலையத்திற்குள் செல்கிறது. கழிவுநீர் கால்வாயின் ஆழம் நான்கு அடியாக உள்ளது. இதில் இரண்டரை அடி மண், குப்பைகள் நிரம்பி கழிவுநீர் செல்லாத நிலை உள்ளது. கடைகள் மற்றும் ஓட்டல் பேக்கரிகளிலிருந்தும் குப்பைகள் கழிவுநீர் கால்வாயில் கொட்டப்படுகிறது. சில தனியார் ஓட்டல்கள், சாக்கடை கால்வாயின் மேல் சிமென்ட் தரை போட்டுள்ளனர். இதனால் கழிவுநீர் அடைப்பு ஏற்படுவதுகூட கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. சிறிய அளவு மழை பெய்தாலும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனிடையே, கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருவதால், வீட்டினுள் மழைநீருடன் கழிவுநீரும் செல்கிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி, பராமரிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram