தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றிய ஒப்பந்ததாரர்
17 Jun 2026, 12:18 am
<p><strong>தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றிய ஒப்பந்ததாரர்</strong></p><p>தருமபுரி, ஜூன் 16- தருமபுரி நகராட்சியில் பணி யாற்றும் தூய்மைப் பணியாளர்க ளின் தினக்கூலியை ஏமாற்றும் ஒப் பந்ததாரர் மீது நடவடிக்கை வலியு றுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி, உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி நகராட்சியில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்க ளுக்கு அரசாணை எண்: 2டி, 62 இன் படி, நபர் ஒருவருக்கு தினக்கூலி யாக ரூ.745 வழங்க வேண்டும். ஆனால், தற்போது ஒப்பந்ததாரர் நாளொன்றுக்கு ரூ.410 மட்டுமே வழங்கி வருகிறார். ஒரு தூய்மைப் பணியாளருக்கு ஒரு நாளைக்கு ரூ.335 வீதம், 130 ஒப்பந்த தூய் மைப் பணியாளர்களிடம் 13 மாதங் களாக ஒரு கோடியே எழுபது லட் சத்தை (ரூ.1,70,00,000) அவர் ஏமாற் றியுள்ளார். அவர் மீது மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஏமாற் றப்பட்ட தொகையை வசூலித்து, தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட் சித்துறை ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று தர்ணாவில் ஈடுபட்ட னர். தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற தர்ணா விற்கு, சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஏ.சேகர் தலைமை வகித் தார். இதில், சிஐடியு மாநில துணைத் தலைவர் சி.நாகராசன், சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சி. குட்டியப்பன், பொருளாளர் மணி கண்டன், மாவட்ட நிர்வாகிகள் எம். வெங்கடேசன், ஜி.வள்ளி, ஏ.சத்யா, ஏ.சின்னசாமி, வி.சிவா, ஜி.ராஜேஸ் வரி உட்பட பலர் கலந்து கொண் டனர்.</p>
