தூய்மைப் பணியாளர்களின் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சிஐடியு காத்திருப்புப் போராட்டம்
8 Aug 2026, 12:16 am

தூய்மைப் பணியாளர்களின் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சிஐடியு காத்திருப்புப் போராட்டம்

தருமபுரி, ஆக.7-தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சேரவேண்டிய தினக்கூலி மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, சிஐடியு சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளியன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.தருமபுரி நகராட்சியில் 123 தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தினக்கூலி உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கடந்த ஜூன் 21 அன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, நகராட்சி ஆணையர், வட்டாட்சியர் மற்றும் ஒப்பந்த மேலாளர் ஆகியோர் சிஐடியு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலுவைத் தொகையை வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தனர். அதன்பேரில் அன்று போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஊதிய நிலுவைத் தொகையையோ, 2025 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான காலகட்டத்திற்கான தினக்கூலி நிலுவைத் தொகையையோ நகராட்சி நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை.எழுத்துப்பூர்வமாக அளித்த உறுதியை மீறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தூய்மைப்பணியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் வெள்ளியன்று மீண்டும் தருமபுரி நகராட்சிஅலுவலகம் முன்பு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறைத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்புப் போராட்டம்நடத்தப்பட்டது.

இப்போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஏ. சேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் சி. கலாவதி,மாவட்டப் பொருளாளர் எஸ். சண்முகம், சங்க நிர்வாகிகள் சி. குட்டியப்பன், செல்வம், மணிகண்டன், சத்யா, சின்னசாமி, செல்வராஜ், சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில் திரளான தூய்மைப்பணியாளர்கள் பங்கேற்றனர்.