சனத்குமார் நதி ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வார நடவடிக்கை
9 May 2026, 1:59 am
<p><strong>சனத்குமார் நதி ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வார நடவடிக்கை</strong></p><p>தருமபுரி, மே 8- சனத்குமார் நதி ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரும் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் வெள்ளியன்று ஆய்வு செய்தார். தருமபுரி மாவட்டம், ஏமகுட்டியூர் பகுதியிலுள்ள சனத்குமார் நதியினை தூர்வாரும் பணி மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி குறித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் வெள்ளியன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அரூர் நகராட்சி பகுதியில் ரூ.21.60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், சனத்குமார் நதியில் ஏறக்குறைய 8.5 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் நடத்தப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டு, ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அந்த ஆக்கிரமிப்பு பணிகளை கண்டறிந்து உரிய சட்ட முறையில் எடுத்து, நதியினை மீண்டும் புதுப்பொலிவுடன் மாற்றப்படும். தருமபுரி மாவட்டத்திற்கும், குறிப்பாக தருமபுரி நகராட்சிக்கு மிகுந்த ஒரு நீர் ஆதாரமாக விளங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரை சனத்குமார் நதியின் புனரமைக்கப்படும் திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு, அதன் கீழ் பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் வளர்ச்சித் துறை, காவல் துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு, 3 கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக, உங்கரானப்பள்ளியில் இருந்து விருப்பாச்சிபுரம் வரை 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். வத்தல்மலையிலிருந்து கூடுதுறை தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் வரை சுமார் 46 கிலோ மீட்டரில் இருந்து 8.5 கிலோ மீட்டர் வரை தூர்வாரம் பணிகள் முதற்கட்டமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும், என்றார். இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விமல் ரவிக்குமார், நகராட்சி ஆணையர்கள் வசந்தி, வே.விஜயாஸ்ரீ, வட்டாட்சியர் ஜெ.சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
