ஓய்வூதியர் சங்க தருமபுரி மாவட்ட பேரவை
18 Jul 2026, 10:20 pm
<p><strong>ஓய்வூதியர் சங்க தருமபுரி மாவட்ட பேரவை</strong></p><p>தருமபுரி, ஜூலை 18- ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை சனியன்று நடைபெற்றது. இதில், நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் 5 ஆவது தருமபுரி மாவட்ட பேரவைக் கூட்டம், தருமபுரி அலுவலக உதவியாளர் சங்க அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.கேசவன் தலைமை வகித் தார். முன்னாள் மாநில துணைத்தலை வர் கே.ஆர்.அப்பாவு துவக்கவுரையாற் றினார். மாவட்டச் செயலாளர் ஜி.நந்த கோபால், பொருளாளர் எஸ்.குணசேக ரன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் எம்.சுருளிநாதன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் ச.இளங்குமரன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நட வடிக்கை விசாரணைகளை தாமத மின்றி காலவரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வுபெறும் நாளில் தற்கா லிக பணிநீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிடப்பட வேண்டும். அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை முறையினை உத்தரவாதப் படுத்த வேண்டும். ஓய்வூதிய சட்டத் திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நிதிச் சட்டம் – 2025ஐ திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக கே.கேசவன், செயலாளராக ஜி.நந்தகோபால், பொரு ளாளராக எஸ்.குணசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.மோகன் ராஜ், நிறைவுரையாற்றினார். முடி வில், மாவட்ட துணைத்தலைவர் ஆர். கிருஷ்ணன் நன்றி கூறினார்.</p>
