தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடந்த 5 மாதங்களில் 740 சாலை விபத்து: 175 பேர் உயிரிழப்பு

7 Jun 2026, 12:13 am
கடந்த 5 மாதங்களில் 740 சாலை விபத்து: 175 பேர் உயிரிழப்பு
<p><strong>கடந்த 5 மாதங்களில் 740 சாலை விபத்து: 175 பேர் உயிரிழப்பு</strong></p><p>தருமபுரி, ஜூன் 6- கடந்த 5 மாதங்களில் தருமபுரி மாவட்டத்தில் நேரிட்ட 740 சாலை விபத்துகளில், 175 பேர் உயிரிழந் துள்ளனர்; 800 பேர் காயமடைந்துள்ள னர். தருமபுரி மாவட்டம் வழியாக காஷ்மீரையும், கன்னியாகுமரியை யும் இணைக்கும் தேசிய நெடுஞ் சாலை (எண் 44 சேலம் - பெங்க ளூரு சாலை) செல்கிறது. அதே போல, தருமபுரி - நெருளூரூ வழியாக பெங்களூரு செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலை சேலத்தில் இருந்து அரூர் வழியாக வாணியம் பாடி வரை செல்லும் நெடுஞ்சாலை, தருமபுரியில் இருந்து திருவண்ணா மலை செல்லும் நெடுஞ்சாலை என முக்கிய நெடுஞ்சாலைகள் பல தரும புரி மாவட்டம் வழியாக செல்கின்றன. இந்த நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிக ரித்து வருகிறது. அதேபோல விபத்து களின் எண்ணிக்கையும், அதில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை யும் ஆண்டுக்கு ஆண்டு அதிக ரித்து வருகிறது. அதன்படி, தரும புரி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நேரிட்ட விபத்துகளில் 350 பேர், 2024 ஆம் ஆண்டில் 387 பேரும், 2025 ஆம் ஆண்டில் 417 பேரும் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரிட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்துள் ளனர். அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத் தில் நேரிட்ட விபத்துகளில் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை கணிச மாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிகழாண்டில் ஜன வரி முதல் மே மாதம் வரை மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில், மொத் தம் 740 சாலை விபத்துகள் நேரிட்டுள் ளன. அவற்றில் 175 பேர் உயிரிழந் தும், 800 பேர் காயமடைந்தும் உள்ள னர். மிகவும் அபாயகரமான தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு 79 விபத்துகளில் 21 பேர் உயிரிழந்தும், 84 பேர் காயமடைந் தும் உள்ளனர். அதேபோல, 2024 ஆம் ஆண்டில் 98 விபத்துகளில் 30 பேர் உயிரிழந்தனர். 132 பேர் காயம டைந்தனர். 2025 ஆம் ஆண்டு 119 விபத்துகளில் 33 பேர் உயிரிழந்தனர். 117 பேர் காயமடைந்துள்ளனர். நிக ழாண்டில், ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டும் தொப்பூர் கணவாய் பகுதியில் மொத்தம் 35 விபத்துகள் நேரிட்டுள்ளன. இதில், 7 பேர் இறந்த னர். 31 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இது வரை தொப்பூர் கணவாய் பகுதி யில் மட்டும் 331 விபத்துகள் நேரிட்ட தில், 91 பேர் இறந்துள்ளனர். 364 பேர் காயமடைந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.